2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாது?

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாதென அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே கூறியதாக த சண் இணயத்தளம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாதென பொதுவெளியில் கூற மே இன்னும் தயாரில்ளையெனவும் ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான முக்கிய பேரம்பேசல்களை அது பாதிக்குமென்று த சண் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்திருக்க விரும்பும் அமைச்சர்கள், ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான (பிரெக்சிற்) எதிர்ப்பதை தனிப்பட்ட ரீதியில் வெளிப்படுத்தி மேயில் தாக்கம் செலுத்துவதில் வெற்றிபெற்றுள்ளதாக தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.

முன்னததாக கல்விச் செயலாளர் டேமியன் ஹைன்ட்ஸ், ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது அரசாங்க கொள்கையகும் நிலையை தன்னால் உருவகித்துப் பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா இருப்பதற்கு ஆதரவான அமைச்சர்களை பதவி விலகவேண்டாமென அமைச்சரவை அமைச்சர் டேவிட் லிடிங்டன் கோரியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா விலகுவதற்கு எதிர்த்து வாக்களிக்கும் பொருட்டு அம்பர் றூட் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவி விலகுவதாக எச்சரித்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .