2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஒப்பந்தத்துக்கு அங்கிகாரம் இல்லையெனில் பிரெக்சிற் தடைப்படும்’

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்கிற்) தொடர்பாகத் தன்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரிக்குமாயின், பிரெக்சிற் தடைப்படும் ஆபத்துள்ளது என, ஐ.இராச்சியப் பிரதமர் தெரேசா மே நேற்று (14) எச்சரித்தார்.

பிரதமரின் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு, ஐ.இராச்சிய நாடாளுமன்றத்தில் இன்று (15) இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னைய நாளில், தனது திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்போரைத் தன்பக்கம் இழுக்கும் இறுதிக்கட்ட முயற்சியாக, தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் மே ஆற்றிய உரை அமைந்திருந்தது.

பிரதமரின் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு, டிசெம்பரில் நடைபெறவிருந்த போதிலும், அதில் அவர் தோல்வியடைவது ஓரளவுக்கு உறுதியானதைத் தொடர்ந்து, அந்நிலையை ஏற்றுக்கொண்ட அவர், வாக்கெடுப்பைப் பிற்போட்டிருந்தார். அதன் பின்னர், கடந்த வாரம் ஆரம்பித்த 5 நாள்கள் கொண்ட விவாதத்தின் போது, பிரதமர் மே-க்கு, இரண்டு தடவைகள் தோல்வி கிடைத்திருந்தது. எனவே, இன்றைய வாக்கெடுப்பிலும் அவருக்குத் தோல்வி கிடைக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், “தங்களுக்குக் காணப்படுகின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பிரெக்சிற்றைத் தாமதப்படுத்தவோ, இல்லையெனில் நிறுத்தவோ விரும்புகின்ற சிலர், வெஸ்ட்மினிஸ்டரில் (நாடாளுமன்றில்) உள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மே-இன் திட்டத்துக்கான எதிர்ப்பைத் தொடர்ந்து, எதுவித ஒப்பந்தங்களுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐ.இராச்சியம் விலகுமென அஞ்சப்படுகின்ற போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒப்பந்தமின்றிய பிரெக்சிற்றை விட, பிரெக்சிற்றைத் தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகளே உள்ளனவென அவர் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .