2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’ஒப்பந்தமில்லாத பிரெக்சிற்றை நோக்கி பிரித்தானியா’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக (பிரெக்சிற்) உள்ளதற்கு முன்பாக, தொடர்ச்சியான பிரச்சினையான அயர்லாந்து எல்லைகளைத் தீர்ப்பதற்கான பிரித்தானியாவின் யோசனைகள் தற்போதும் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தாதென்ற நிலையில், ஒப்பந்தமில்லாத பிரெக்சிற்றை நோக்கி பிரித்தானியா செல்வதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று  எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஒப்பந்தமொன்றை இன்னும் பிரித்தானியா வேண்டுவதாகவும் ஆனால் ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தமில்லாமலோ அடுத்த மாதம் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் என தனக்கு பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடந்த திங்கட்கிழமை தெரிவித்ததாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பிரான்ஸின் ஸ்ராஸ்பேர்க்கில் உரையாற்றும்போது ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜூன்-கிளாடியே ஜங்கர் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்திலேயே மிகவும் குறுகிய நேரமே இருப்பதால், ஒப்பந்தமில்லாத பிரெக்சிற் ஒன்று ஏற்படுவதற்கான ஆபத்து மிகவும் உண்மையாக இருப்பதாக மேலும் ஜூன்-கிளாடியே ஜங்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நாளான அடுத்த மாதம் 31ஆம் திகதியை நீடிப்பதொன்றுக்காக பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில், இந்ந நகர்வு அதிகாரபூர்வமானது அல்லாது விட்டாலும் அரசியல் ரீதியாக பெறுமதி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸெல்ஸில் அடுத்த மாதம் 17ஆம், 18ஆம் திகதிகளில் கூடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், பிரெக்சிற் பற்றி தீர்மானிக்கவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு 2016ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் வாக்களித்த நிலையில், ஒப்பந்தமில்லாத பிரெக்சிற்றின் மோசமான நிலையின்போது வர்த்தகத்தில், மருந்துப் பொருட்கள், மரக்கறிகளின் விநியோகத்தில் மோசமான பாதிப்பு, பொது ஒழுங்கு குழம்பும் வாய்ப்பு ஏற்படுமென பிரித்தானிய அரசாங்கத்தின் ஆவணங்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .