2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஒரு வாரத்துக்குள் ஒத்துழைப்பிலிருந்து பின்வாங்கவுள்ளோம்’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரு வாரத்துக்குள் ஒத்துழைப்பில் இருந்து பின்வாங்கவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அணுக் கண்காணிப்பகத்துக்கு ஈரான் தெரிவித்ததாக, தனது அங்கத்துவ நாடுகளுக்கு கண்காணிப்பகம் அனுப்பிய அறிக்கை நேற்று வெளிப்படுத்தியுள்ளது.

ஐ. அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்துடனான அணு ஒப்பந்தத்தின் கீழான தன்னார்வ வெளிப்படை நடவடிக்கைகளை, மேலதிக நடவடிக்கைகளை செயற்படுத்துவதை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஈரான் நிறுத்தவுள்ளதாக சர்வதேச அணு சக்தி முகவரகத்துக்கு நேற்று முன்தினம் ஈரான் அறிவித்ததாக முகவரகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படாத இடங்களில் குறுகிய கால அறிவித்தலில் சோதனைகளை முகவரகம் நடாத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .