2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஓராண்டுக்கு முன்பதாக துருக்கியில் நாடாளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே திட்டமிடப்பட்டதற்கு ஓராண்டுக்கு முன்பதாக, இவ்வாண்டு ஜூன் 24ஆம் திகதி நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி றிசெல் தயீப் ஏர்டோவான் தெரிவித்துள்ளார்.

தனது ஜனாதிபதி மாளிகையிலிருந்து மேற்படி அறிவிப்பை நேற்று வெளியிட்ட ஏர்டோவான், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு துருக்கி உடனடியாக திரும்ப வேண்டுமென்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தேர்தல்களுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றபோதும் தயார்படுத்தல்கள் ஆரம்பமாகுமென ஏர்டோவான் தெரிவித்துள்ளார்.

முன்னதாகவே தேர்தல்களென்ற யோசனையை நேற்று முன்தினம்வெளிப்படுத்திய தேசியவாத இயக்க கட்சியின் தலைவர் டெவ்லெட் பஹ்செலியை நேற்றுச் சந்தித்த பின்னரே தேர்தலுக்கான அறிவிப்பை ஏர்டோவான் வெளியிட்டிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அடுத்தாண்டு நவம்பரிலேயே நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெறுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிரியாவில் துருக்கி அண்மையில் மேற்கொண்டிருந்த இராணுவ நடவடிக்கை தொடர்பில் உயர்வான தேசியவாத எண்ணம் காணப்படுகின்ற நிலையிலேயே முற்கூட்டீயே தேர்தலை நடாத்துவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், நடைபெறவுள்ள தேர்தலோடு, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் காணப்படும் முறையிலிருந்து விலகி ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்குகின்ற கடந்தாண்டு ஏப்ரலில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு மயிரிழையில் வென்ற முறைமைக்கு துருக்கி செல்கிறது.

இந்நிலையில், தற்போதிருக்கின்ற அவசரகால நிலையை இன்னொரு மூன்று மாதங்களுக்கு நீடிக்கின்றமைக்கு ஆதரவாக துருக்கி நாடாளுமன்றம் நேற்று வாக்களித்திருந்தது. அந்தவகையில், 2016ஆம் ஆண்டு ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட தோல்வியில் முடிவடைந்த இராணுவப் புரட்சியிலிருந்து அவசரகாலநிலை அமுலில் இருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .