2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஓராண்டுக்குள் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓராண்டுக்குள் தனது மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலை அடுத்தாண்டு மார்ச் மாதம் இரண்டாம் திகதி இஸ்ரேல் நடாத்த நாடாளுமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலிருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரின் பிரதான போட்டியாளரான பென்னி கன்ட்ஸும் புதிய கூட்டணி அரசாங்கத்துக்கான பேச்சுக்களை முன்னெடுக்கத் தவறியதைத் தொடர்ந்தே ஓராண்டுக்குள் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய நாடாளுமன்றத் தேர்தல் திகதியை தெரிவுசெய்வதற்கான சட்டமூலத்துக்கு ஆதரவாக 94 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்ததுடன், எவரும் எதிர்த்து வாக்களித்திருக்கவில்லை.

இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அரசாங்கமொன்றை அமைப்பதற்கான இறுதிக் காலக்கெடு தாண்டிய சில மணித்தியாலங்களிலேயே மேற்குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

செப்டெம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியோ அல்லது கன்ட்ஸின் நீலம் மற்றும் வெள்ளைக் கட்சியோ, 120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நிலையான கூட்டணியொன்றுக்கான போதுமான ஆதரவைப் பெற்றிருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .