2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடும் மோதல்களுக்குள் முக்கிய பாதையைக் கைப்பற்றிய ஹூதிகள்

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் தலைநகர் சனாவுக்கு வடக்கு, கிழக்காக அரசாங்கப் படைகளுக்கெதிராக நேற்று  முன்னேற்றங்களைப் பெற்ற ஹூதிப் போராளிகள், மூலோபாயமில்ல வீதியொன்றை கடும் மோதலில் கைப்பற்றியதாக ஹூதிகளுக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனாவை கிழக்கு மாகாணமான மரிப், வட மகாணமான ஜோஃப்பை இணைக்கும் பாதையை ஹூதிகள் கைப்பற்றியுள்ளதாக அரசாங்கத்துக்கு ஆதரவான தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், குறித்த இராணுவத் தகவல் மூலங்களின் தகவல்படி சனாவைச் சூழ இடம்பெற்ற மோதல்களில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். எனினும், குறித்த தகவல் மூலங்களால் குறிப்பான தரவுகளை வழங்க முடிந்திருக்க முடியவில்லை.

இதேவேளை, ஜோஃப் மாகாணத்தின் தலைநகரான ஹஸாமைக் கைப்பற்றத் தற்போது ஹூதிகள் எதிர்பார்ப்பதாக தன்னை அடையாளங்காட்ட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதுடன், ஹஸாமிலிருந்து ஐந்து கிலோ மீற்றர்கள் தூரத்தில் ஹூதிகள் காணப்படுவதாக மேலும் கூறியுள்ளார்.

இந்த மோதல்களுக்கு முன்னர் ஜோஃப் மாகாணத்தை பெரும்பான்மையாக ஹூதிகள் கட்டுப்படுத்தியிருந்தபோதும், ஹஸாம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்திருந்தது.

மரிப் மாகாணமானது பகுதியளவில் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், அதன் தலைநகரும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .