2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கட்டார் விவகாரம்: விடாப்பிடியாக சவூதி

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாருடனான உறவுகளைத் துண்டித்த பின்னர், அவற்றை மீளக் கொண்டுவருவதற்கு விதித்த நிபந்தனைகளில், விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என, சவூதி அரேபிய வெளிநாட்டு அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் தெரிவித்துள்ளார். எனவே, கட்டாருக்கும் ஏனைய அரபு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்துக் கேள்வியெழுந்துள்ளது.

இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்த அமைச்சர் அடெல், “கட்டார் தொடர்பான எங்கள் நிபந்தனைகள், பேரம்பேச முடியாதன. தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் தனது ஆதரவை நிறுத்துவது தொடர்பான முடிவு, கட்டாரின் கையில் காணப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்ஸன் முயன்று வருகிறார். அவர், இது தொடர்பாக, சவூதி அரேபியாவுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார். இவற்றுக்கு மத்தியிலேயே, சவூதியின் கடும்போக்கான இந்த நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .