2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கனேடியத் தூதுவரை வெளியேற்றியது சவூதி

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறையிடைக்கப்பட்ட செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறான கனடாவின் கோரிக்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, கனேடியத் தூதுவரை தாம் வெளியேற்றுவதாக இன்று தெரிவித்துள்ள சவூதி அரேபியா, அனைத்து புதிய வியாபாரங்களையும் இடைநிறுத்துவதுடன் தனது தூதுவரையும் திரும்ப அழைத்துள்ளது.

தமது உள்விவகாரங்களுக்கான தலையீடாக குறித்த கோரிக்கைகளை விமர்சித்துள்ள சவூதி அரேபியா, கனேடியத் தூதுவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 24 மணித்தியால அவகாசத்தை வழங்கியுள்ளது.

புதிய நடவடிக்கையொன்றில் கைது செய்யப்பட்ட மனித உரிமைகள் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்குமாறு கனடா வலியுறுத்திய நிலையில், குறித்த நகவர்வானது பட்டத்துக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானால் முன்னெடுக்கப்படும் ஆக்ரோஷமான வெளிநாட்டுக் கொள்கையை எடுத்தியம்பி நிற்கிறது.

விருது வென்ற பால் உரிமைகள் செயற்பாட்டாளரான சமர் படாவி உட்பட பெண்கள், மனித உரிமைச் செயற்பட்டாளர்கள் சவூதி அரேபியாவில் கைது செய்ய்யப்பட்டமை குறித்து தாம் மிகவும் கவலையடைவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

சமர் படாவி, சக செயற்பாட்டாளரான நஸிமா அல்-சதாவுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர். வலைப்பதிவரான தனது சகோதரரான றைவ் படாவியின் ஆதரவாளரே சமர் படாவி ஆவார். இஸ்லாமை அவமதித்ததுக்காக றைவ் படாவி 2012ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 1,000 கசையடிகளும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தமை சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X