2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கம்முரி சூறாவளி பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்தது

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு தெற்காகவுள்ள மாகாணங்களைத் தாக்கிய கம்முரி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகவரகங்கள் இன்று தெரிவித்துள்ளன.

பிலிப்பைன்ஸுக்குள் இவ்வாண்டு நுழைந்த 20ஆவது சூறாவளியானது கம்முரியானது கடந்த திங்கட்கிழமையிரவு தரையைத் தாக்கிய நிலையில், ஆயிரக்கணாக்கானோர் இடம்பெயரவேண்டி ஏற்பட்டிருந்தததோடு, நூற்றுக்கணக்கான விமானச்சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தவிர, பிலிப்பைன்ஸில் தற்போது நடைபெற்றுவரும் தென்கிழக்காசியப் போட்டிகளின் சில நிகழ்வுகளையும் பாதித்திருந்தது.

மத்திய பிகொல் பிராந்தியத்தில், மூழ்கிய மூவர் உட்பட ஐவர் இறந்ததாக உள்ளூர் இடர் முகவரகமொன்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இதுதவிர, மணிலாவுக்கு தெற்காகவுள்ள பிராந்தியத்தில் மேலும் ஐவர் இறந்திருந்தனர்.

இதேவேளை, ஏறத்தாழ 345,000 பேர் இன்னும் வெளியேற்றப்பட்ட நிலையங்களில் இருப்பதாகவும், மீண்டும் வீடுகளுக்குத் திரும்புவதற்கான அதிகாரிகளின் அனுமதிக்கு காத்திருப்பதாக இடர் முகவரகத்தின் பேச்சாளர் மார்க் டிம்பால், ஏ.என்.சி ஒளிபரப்பு நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வலிந்த வெளியேற்றல்கள், தயார்படுத்தல்களால் பெரும்பாலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, தென்சீனக்கடலை நோக்கி கம்முரி நகர்கையில் அதன் வேகமான மணிக்கு 100 கிலோ மீற்றர்களாகக் குறைவடைந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .