2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனாவிடமிருந்து மீள முடியாமல் தவிக்கும் அமெரிக்கா

S. Shivany   / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது.

இதற்கமைய, அமெரிக்காவில்  நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 1 இலட்சம் முதல் 2 இலட்சம் வரையிலான நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை  2 லட்சத்து 65 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
மேலும், கொரோனாவால் 1.65 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 76 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .