2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கர்நாடக இந்து கோவில்களிலும் அர்ச்சகராக தலித்கள் நியமனம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரளாவைப் போன்று, கர்நாடகாவிலும் இந்து கோவில்களில், தலித்து இன மக்கள், அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று, முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். 

இது குறித்து, சித்தராமைய்யா மேலும் கூறியுள்ளதாவது,  

“கர்நாடகாவில், விரைவில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், சட்டமூலம் தாக்கல் செய்யப்படும். அண்டை மாநிலமான கேரளாவில், தலித்துகள் உள்ளிட்ட பிராமணர் அல்லாதவர்கள், இந்து கோவில்களில், அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

“இதுபோல், கர்நாடகாவிலும் நியமனம் செய்ய, எந்தத் தடையோ, தயக்கமோ இல்லை. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்” என்று அவர் கூறினார். 

சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு, பா.ஜ.க, சிவசேனா, ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மடாதிபதிகளை ஒருங்கிணைத்து, போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர். 

இதனிடையே, கர்நாடகாவில் உள்ள தலித் அமைப்பினரும் சமூக செயற்பாட்டாளர்களும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துகளுக்கு உயிர் கொடுத்து வருவதாக, சமூக வலைதளங்களில் சித்தராமையாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினரும், சித்தராமையாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .