2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கர்நாடகாவில் பா.ஜ.கவுக்கு வெற்றி கிடைக்குமா?

Editorial   / 2018 மே 14 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கெடுப்பு, நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற நிலையில், அத்தேர்தல் முடிவுகள், நாளை (15) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன. ஆனால், தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு முன்னிலை கிடைக்கலாமெனக் கருதப்படுகிறது.

கடுமையான பிரசாரங்களின் பின்னர், இவ்வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்த நிலையில், மத்தியிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டும், இத்தேர்தலில் வெற்றிபெற எதிர்பார்த்துள்ளன.

இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் 22 மாநிலங்களில் பா.ஜ.க ஆண்டாலும், தென் மாநிலங்களில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தவறி வருகிறது. எனவே, தென் மாநிலமான கர்நாடகாவில் அக்கட்சிக்கு வெற்றி கிடைத்தால், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை இலக்குவைப்பதற்கு இலகுவாக இருக்கும்.

மறுபக்கமாக, கர்நாடகவாவில் ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சியைத் தக்கவைக்க எதிர்பார்த்துள்ளது. அதிலும் குறிப்பாக, காங்கிரஸின் நிரந்தரத் தலைவராக ராகுல் காந்தி, கடந்தாண்டு இறுதியில் பதவியேற்ற பின்னர், வெற்றியொன்றைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையிலேயே, வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பலவற்றில் பா.ஜ.கவே முன்னிலை வகிக்கிறது. ஓரிரு கருத்துக்கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. எப்படியான நிலை ஏற்பட்டாலும், அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 112 வாக்குகளை, இரு கட்சிகளும் பெற முடியாத நிலை கூட ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. அப்படியான நிலையில், ஜனதா தள கட்சியே, ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக மாறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .