2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கள்ளச் சாராயம் குடித்து 62 பேர் பலி

Editorial   / 2018 ஏப்ரல் 12 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவில், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியோரில் 62 பேர் பலியாகியுள்ளனர் எனவும் இன்னும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை, தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. எனவே, இன்னமும் மிகப்பெரிய அனர்த்தமாக இது அமையுமென அஞ்சப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஷியா, ஏனைய முஸ்லிம் நாடுகளுடன் ஒப்பிடும் போது, மிதவாத இஸ்லாமைக் கடைப்பிடிக்கும் நிலையில், பெரிய நகரங்களில், மதுபானத்தைப் பெற முடியும். ஆனால், அதிகபட்ச வரி காரணமாக, அதன் விலை அதிகமாகக் காணப்படுகிறது.

எனவே, குறைந்த வருமானம் பெறுவோர், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் மதுபானங்களை அருந்துகின்றனர். அவ்வாறான சில சந்தர்ப்பங்களின் போதே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற இச்சம்பவங்களின் போது, இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் சிக்கியுள்ளனர்.

இது சம்பந்தமாக, இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X