2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கஸ்னியில் 400 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து 150 கிலோமீற்றர் தெற்காகவுள்ள கிழக்கு நகரமான கஸ்னியில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நேற்று வரை இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் தலிபான் ஆயுததாரிகளுக்குமிடையிலான மோதலில் 150 பொதுமக்கள் உட்பட 400 பேர் கொல்லப்பட்டிருக்கலாமென ஐக்கிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பமைச்சும் தெரிவிக்கின்றது.

மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஐக்கியு நாடுகளின் அலுவலகம், 130 தொடக்கம் 150 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளபோதும் குறித்த எண்ணிக்கைகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஐந்து நாள் தீவிர மோதல்கள், ஐக்கிய அமெரிக்க விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து கடை உரிமையாளர்களும் அங்கு வசிப்போரும் வீதிகளுக்கு இன்று திரும்பிய நிலையில் கஸ்னியிலிருந்து தலிபான் ஆயுததாரிகள் அகன்று விட்டனர் என்று நம்பப்படுகிறது. பாதுகாப்புப் படைகள் ரோந்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கஸ்னியின் மத்தியில் தலிபான்கள் காணப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறெனினும், கஸ்னியின் புறநகர்களிலுள்ள கிராமமொன்றிலாவது தலிபான் படைகள் காணப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில், தலிபான்கள் அண்மையிலேயே இருப்பதாக பாதுகாப்புப் படைகள் தெரிவித்ததாக அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், காயமடைந்த அரசாங்கப் படைகள், தலிபான் ஆயுததாரிகள், பொதுமக்களால் கஸ்னி பொது வைத்தியசாலை நிரம்பி வழிவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, உணவு விநியோகங்கள் குறைவாக இருப்பதை கஸ்னியிலுள்ளனவர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

கஸ்னியைச் சூழவுள்ள மாவட்டங்களில் தலிபானின் கட்டுப்பாடு அதிகரித்திருந்த நிலையில் தாக்குதல் குறித்து உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், கஸ்னியை பாதுகாக்கத் தவறியமை குறித்த குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி எதிர்கொள்கிறார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .