2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காட்டுத் தீயால் 41 பேர் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போர்த்துக்கல்லில், கடந்த வாரயிறுதியில் ஆரம்பித்த காட்டுத்தீ காரணமாக, குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டதோடு, பல வீடுகளும் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஸ்பெய்னின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால், மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.

போர்த்துக்கல்லில் இடம்பெற்ற அழிவுகள் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட சிவில் பாதுகாப்பு முகவராண்மை, 15 இடங்களில் தீ ஏற்பட்டது எனவும் நாட்டின் மத்திய, வடக்குப் பகுதிகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்ததோடு, தற்போது, இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.

உயிரிழந்தவர்கள் தவிர, 71 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்த முகவராண்மை, அவர்களுள் 16 பேருக்கு, பாரதூரமான காயங்கள் ஏற்பட்டன எனவும் தெரிவித்தது. தவிர, மேலுமொருவரை இன்னமும் காணவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் அநேகமானோர், அவர்களுடைய கார்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர் எனவும், இன்னும் சிலர், தங்களது வீடுகளுக்குள் இருந்து உயிரிழந்தனர் எனவும், முகவரகம் தெரிவித்தது.

தீ ஏற்பட்ட அனுபவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வடக்குப் பகுதிக் கிராமத்தவர்கள், தீ, மிக வேகமாகப் பரவியது எனவும், சுமார் 45 நிமிடங்களில், அனைத்தும் நடந்து முடிந்தது எனவும் தெரிவித்தனர்.

இதன்மூலமாக, இவ்வாண்டில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, போர்த்துக்கல்லின் 350,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு, காட்டுத்தீயால் அழிவடைந்துள்ளது.

போர்த்துக்கல்லின் அயல்நாடான ஸ்பெய்னில், 88,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு, இவ்வாண்டில் அழிவடைந்துள்ளதுடன், அண்மைய காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 4 என்றே அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X