2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காபூலில் சடலங்கள் நல்லடக்கம்; கோபத்தில் பொதுமக்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேற்று முன்தினம் (22) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 57 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலங்களை நேற்று (23) நல்லடக்கம் செய்த அவர்களின் உறவினர்கள், இத்தாக்குதல் தொடர்பான கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாண்டு ஒக்டோபரில் இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்காகத் தங்களைப் பதிவுசெய்ய, தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக வரிசைகளில் நின்றவர்கள் மீதே, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. கொல்லப்பட்டோருக்கு மேலதிகமாக, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் நடத்தப்பட்ட இத்தாக்குதல் காரணமாக, தேர்தல் தொடர்பாகப் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படும் என, பொதுவான எதிர்பார்ப்புக் காணப்படும் அதே நேரத்தில், தமது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது என, அரசாங்கத்தின் மீதும், மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, ஆயுததாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், போதுமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்ப்பது போல், இத்தாக்குதல்கள் அமைந்துள்ளன. அதேபோன்று, நாட்டின் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வந்த நிலையில், தேர்தல்களை மேலும் பிற்போடுவதற்கான முயற்சியெனவும், சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X