2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கார்கள், வீடுகளைக் கொண்டிருந்த ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 25 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலாவியின் முன்னாள் ஜனாதிபதி பீற்றர் முதரிக்காவின் மிகவும் நம்பிக்கையான, அச்சப்பட்ட மெய்ப்பாதுகாவலராக ஆண்டுக்கணக்காக நொர்மன் சிசேல் அறியப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிசேல் செல்வந்தராகவும் இருந்திருப்பார் போலத் தோன்றுகின்றது.

மலாவியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தியாக, சிசேல், அவரது நெருங்கிய உதவியாளர்கள், உறவினர்களுக்குச் சொந்தமான 2.2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்தை அரச அதிகாரிகள் கடந்த மாதம் கைப்பற்றியிருந்தனர்.

கைப்பற்றப்பட்ட உயர்மதிப்புள்ள சொத்துக்களில், மெர்சிடீஸ் பென்ஸ்கள், றேஞ் றோவர்கள், லான்ட் குறூஸர்கள், ஜீப் விரங்கலர்கள் வரையில் 80க்கும் மேற்பட்ட வாகனங்கள், வசிப்பிட வீடுகள், வர்த்தகக் கட்டடங்கள் உள்ளடங்கலாக 21 சொத்துக்கள் என்பன உள்ளடங்குகின்றன.

தவிர, ஏறத்தாழ 150,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் உள்ள சிசேலின் பெயரில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி முதரிகாவின் வரி விலக்கைப் பயன்படுத்தி சீமெந்தை சிசேல் மோசடியாக இறக்குமதி செய்த மில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்களுடன் தொடர்புபட்டே மேற்ப்படி நடவடிக்கைகள் அமைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .