2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என்று இந்திய மத்திய அமைச்சருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு நிலைகளில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. காவிரியில் மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்துக்கும் தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் அளிக்க கூடாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திலும் வலியுறுத்த வேண்டும் என்றும், ஜல்சக்திதுறைக்கு போதுமான அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும், மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .