2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காஸா எல்லையை மூடியது இஸ்‌ரேல்

Editorial   / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலின் தலைநராக ஜெருசலேத்தை அங்கிகரிக்கும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கடந்த வார அறிவிப்பைத் தொடர்ந்து, பலஸ்தீனப் பகுதியிலிருந்து இஸ்‌ரேலை நோக்கி, தினந்தோறும் எறிகணை வீச்சு இடம்பெற்றதாகத் தெரிவித்து, காஸா எல்லைப் பகுதியை, இஸ்‌ரேல் மூடியுள்ளது.

நேற்று (14) அதிகாலை நேரத்தில், இஸ்‌ரேலின் பகுதிகள் மீது, ஹமாஸ் ஆயுதக்குழு எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, காஸா நிலப்பரப்பிலுள்ள ஹமாஸ் குழுவின் 3 பகுதிகள் மீது, இஸ்‌ரேல் விமானங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளாக, பயிற்சி முகாம்களும் ஆயுதச் சேமிப்பு இடமும் அமைந்தன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றின் பின்னணியிலேயே, காஸா எல்லைப் பகுதியை மூடும் அறிவிப்பை, இஸ்‌ரேல் வெளிப்படுத்தியுள்ளது.

காஸா நிலப்பரப்புக்குப் பொருட்கள் செல்லும் பிரதான பாதையான, கெரெம் ஷலோம் பகுதியும், எரெஸ் பயணிகள் செல்லும் பகுதியும் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, பலஸ்தீனத்தின் தாக்குதல்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இஸ்‌ரேலிய இராணுவத் தரப்பு, வீசப்பட்ட 3 எறிகணைகளில் 2 எறிகணைகள், இஸ்‌ரேலின் ஏவுகணைக்கெதிரான கட்டமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது எனவும், மூன்றாவது ஏவுகணை, திறந்த வெளிப்பகுதியில் வீழ்ந்து வெடித்தது என்றும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .