2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிர்கிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை மோதல்களில் 31 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 மே 01 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிர்கிஸ்தான் – தஜிகிஸ்தானின் பிரச்சினைக்குரிய எல்லையொன்றில், தண்ணீர்ப் பிரச்சினையொன்றையடுத்த மோதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் காயமடைந்ததுடன், 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.  

நீர் வசதியொன்றில் கண்காணிப்பு கமெராக்கள் நிறுவப்பட்டதையடுத்து, இரண்டு தரப்பு மக்களும் மறு தரப்பு மீது கற்களை எறிந்ந நிலையிலேயே மோதல்கள் கடந்த புதன்கிழமை ஆரம்பித்திருந்தன.

யுத்தநிறுத்தமொன்றும், படைகள் பின்வாங்கலும் இணங்கப்பட்டபோதும், சில சூடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளதாகத் தோன்றுகின்றது.

மேற்குறிப்பிட்ட இழப்பு விவரங்கள் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவை என்றவை என்ற நிலையில், தஜிகிஸ்தானின் இழப்புகள் தெளிவில்லாமலுள்ளது.

சமூகவலைத்தளங்களில் பகரப்பட்ட  புகைப்படங்களின்படி, கிர்கிஸ்தானின் பட்கென் பிராந்தியத்தைச் சூழவுள்ள பிரச்சினைக்குரிய பகுதியொன்றில் சில கட்டடங்கள் எரிந்த வண்ணம் காணப்பட்டிருந்தன.

ஆரம்ப மோதல்கள் தீவிரமடைந்தையடுத்து எல்லைக் காவலர்கள் மோதலில் பங்கெடுத்ததாகவும், நேற்று முன்தினம் இரண்டு தரப்பு இராணுவப் பிரிவுகளும் சூட்டைப் பரிமாறியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X