2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு நிலையத்தை மீளவும் திறக்கிறது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகதிகளுக்கான சர்ச்சைக்குரிய தடுப்பு நிலையமான கிறிஸ்மஸ் தீவு தடுப்பு நிலையத்தை அவுஸ்திரேலியா மீளத் திறக்குமெனம் அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் நேற்று (13) தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயுள்ள முகாம்களிலுள்ள அகதிகளை, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே, மொரிசனின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.

கடுமையான குடியேற்றச் சட்டங்களைத் திருத்தி, பசுபிக் கடலிலுள்ள பப்புவா நியூ கினி, நவ்ருவிலுள்ள இரண்டு தடுப்புநிலையங்களிலுள்ள 1,000 அளவிலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு வைத்தியர்கள் கொண்டு செல்லும் உரிமையை வழங்க எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று முன்தினம் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த திருத்தமானது செனட்டால் நேற்று அங்கிகரிக்கப்பட்டு சட்டமாகியநிலையில், இவ்வாண்டு மே மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருக்கும் ஆளும் பழமைவாதக் கூட்டணிக்கு, பாரிய அடியொன்றாகக் கருதப்படுகிறது.

அந்தவகையில், மேற்குறித்த திருத்தமானது, புதிய அலை அகதிகளைக் கொண்டுவருமென்றும், கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையத்தை அரசாங்கத்தால் வலியத் திறக்க வைக்கப்பட்டுள்ளதென்றும் மொரிசன் கூறினார்.

முன்னர், அகதிகள் கடலில் இடைமறிக்கப்பட்டு பப்புவா நியூ கினி, நவ்ருவிலுள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுவதுடன், அவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமென அரசாங்கம் தீர்மானிக்காவிட்டால், அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட மாற்றமானது, ஆயிரக்கணக்கான அகதிகள் இந்தோனேஷியாவுக்கு பயணப்பட்டு, பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு படகில் அவர்கள் செல்வதற்கு ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்தும் நாள்களை மீளக் கொண்டுவரும் என, குடியேற்ற அமைச்சர் டேவிட் கொலெமென், கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

அந்தவகையில், குறித்த பிரச்சினையைப் பயன்படுத்தி, வாக்காளர்களின் ஆதரவை வெல்வதற்கான நம்பிக்கையுடன் மொரிசன் இருக்கிறாறென, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .