2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிழக்கு சீனக் கடல் பிராந்தியத்தில் பதற்றம்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 16 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு சீனக் கடல் பிராந்தியமானது புதிய பதற்றத்தை எதிர்நோக்குகின்றது.

சீனாவாலும், ஜப்பானாலும் உரிமை கோரப்படும் டியோயு தீவுகளுக்கு அருகில் அதிகரித்துள்ள சீன நடவடிக்கையை எதிர்கொள்ளும் விதமாக தமது ஆயுதப் படைகளை அனுப்புவது குறித்து ஜப்பான் கருத்திற் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே, இப்புதிய பதற்றம் காணப்படுகின்றது.

ஜப்பானால் கட்டுப்படுத்தப்படும் அந்நாட்டின் சென்ககுஸ் என்றழைக்கப்படும் தீவுகளில், சீனக் கரையோரக் காவற்படையானது வகிபாகத்தை அதிகரித்துள்ளதாக த செளத் சைனா மோர்னிங்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தீவுகளின் கடற்பரப்புக்குள் சீனக் கரையோரக் காவற்படை கப்பல்கள் நுழைவதானது, கடந்தாண்டின் மாதமொன்றுக்கு இரண்டு தடவை என்றிலிருந்து, கடந்த மாதத்தில் வாரமொன்றுக்கு இரண்டு தடவை என அதிகரித்துள்ளதாக, ஜப்பானியக் கரையோரக் காவற்படையை மேற்கோள்காட்டி குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுக் கப்பல்கள் மீது, பிரச்சினைக்குரிய கடற்பரப்புக்களில் அமைக்கப்பட்ட நிலையங்கள் மீது கரையோரக் காவற்படை தாக்குதல் நடத்த அனுமதிக்கும் சட்டமொன்றை இவ்வாண்டு சீனா நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .