2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது வெள்ளை மாளிகை

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான காங்கிரஸ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ள போதிலும், அந்தக் கோரிக்கையை, வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.

இது தொடர்பான கேள்விகள், வெள்ளை மாளிகையின் நாளாந்த ஊடகச் சந்திப்புகளில் கேட்கப்பட்டன.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சான்டர்ஸ், அக்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி பதிலளித்துள்ளார் என்றும், அக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

“இது, அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு நீண்டகாலத்துக்கு முதல் இடம்பெற்றது. முக்கியமான தேர்தலில், இந்நாட்டு மக்கள், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வாக்களித்துள்ளனர். அந்தச் செயன்முறை மூலமாக, இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளனர்” என்று, சாரா சான்டர்ஸ் குறிப்பிட்டார்.

“இதை, அமெரிக்க மக்கள் அறிந்திருந்தனர். அதன் பின்னர் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக, இவ்விடயத்திலிருந்து நாங்கள் தாண்டிச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையின் இந்நிலைப்பாடு, ஐக்கிய நாடுகளுக்கான ஐ.அமெரிக்கத் தூதுவரான நிக்கி ஹேலி தெரிவித்த கருத்தோடு முரண்பாடானதாகும். ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட, எவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்போரின் கருத்துகள் செவிமடுக்கப்பட வேண்டுமென, அவர் கூறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X