2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குற்றத்தை ஒப்புக்கொண்டார் பேஸ்புக் நிறைவேற்று அதிகாரி

Editorial   / 2018 மார்ச் 22 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேம்பிரிட்ஜ் அனலிடிகா (Cambridge Analytica) நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டதால் பேஸ்புக் பயனாளர்கள் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள அதன் நிறைவேற்று அதிகாரி மார்க் ஸகர்பர்க் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் ஜனாதிபதித் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.

இதில், 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது சுமார் 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது.

அமெரிக்கா மட்டுமின்றி ஜேர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரம் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. பங்குச்சந்தைகளில் அந்நிறுவனத்தின் பங்குகளும் பெருமளவு சரிந்துள்ளன. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மார்க் ஸகர்பர்க் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரத்தில் முக்கிய தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மக்கள் அளிக்கும் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதை சரியான முறையில் செய்யாவிடில் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. விவரங்கள் எப்படி பெறப்பட்டு அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்ககூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இதற்கான நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்துள்ளோம். நாங்கள் சில தவறுகளையும் செய்துள்ளோம். அதை திருத்திக் கொள்ள வேண்டும். பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியவன் என்ற அடிப்படையில் தவறுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்’’ எனக்கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .