2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குழந்தையின் உயிரைப் பறித்த ஹீல்ஸ் செருப்பு

Editorial   / 2018 மே 08 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில், உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடந்த பெண் தவறி விழுந்ததால், அப்பெண்ணின் 6 மாதங்களேயான கு​ழந்தை இறந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ​பற்றி மேலும் தெரியவருவதாவது, ஃபெமிதா ஷேக் என்ற பெண் (வயது 23), மஹாராஷ்டிராவில் உள்ள தானேவில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள, தனது 6 மாத கை குழந்தையுடன் சென்றுள்ளார். இதேவேளை, அவர் மிகவும் பெரிய ஹீல்ஸ் உள்ள செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதன்போது, திருமண மண்டபத்தின் முதல் மாடியில், பேசியபடி நடந்துகொண்டிருந்த குறித்த பெண், ஹீல்ஸ் செருப்பு தடுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மாடியில் இருந்து விழும் போது, அவர் கையில், அவரது 6 மாத குழந்தையும் இருந்துள்ளது. மாடியில் இருந்து விழுந்த ஃபெமிதாவுக்கு, தலையில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரின் குழந்தைக்கு தலையில் மிகவும் பெரிய காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்துள்ள நிலையில், இருவரையும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவத்​தால், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், குறித்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .