2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கென்ய ஜனாதிபதியின் தேர்தல் வெற்றி உறுதியானது

Editorial   / 2017 நவம்பர் 21 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற, கென்யாவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்களை, கென்ய உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதன்மூலமாக, அத்தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா பெற்ற வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இம்மாதம் 28ஆம் திகதி, நாட்டின் ஜனாதிபதியாக, கென்யாட்டா மீண்டும் பதவியேற்கவுள்ளார். இத்தேர்தல் முடிவு, கென்யாவில் நிலவிவந்த பரபரப்பான சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துமெனக் கருதப்படுகிறது.

“முன்வைக்கப்பட்ட மனுக்கள், பொருத்தமற்றவை என, நீதிமன்றம் ஏகோபித்த ரீதியில் தீர்மானித்துள்ளது. அதன் விளைவாக, ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் உறுதிப்படுத்தப்படுவதோடு, மூன்றாவது பிரதிவாதியின் (கென்யாட்டா) தேர்வும் உறுதிப்படுத்தப்படுகிறது” என்று, பிரதம நீதியரசர் டேவிட் மராகா தெரிவித்தார்.

ஏற்கெனவே, ஓகஸ்ட் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை இரத்துச் செய்வதாக, நீதியரசர் டேவிட் மராகா தலைமையிலான நீதியரசர் குழாம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்தே, ஒக்டோபர் 26இல், மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

எனினும், இத்தேர்தல் தொடர்பாகவும் சந்தேகம் நிலவியது. குறிப்பாக, தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவர், இத்தேர்தல் நியாயமாக நடைபெறாது எனத் தெரிவித்ததோடு, நாட்டை விட்டும் தப்பியோடியிருந்தார்.

எதிர்க்கட்சியின் பிரதான வேட்பாளரான றைலா ஒடிங்காவால் புறக்கணிக்கப்பட்டிருந்த இத்தேர்தலில், ஜனாதிபதி கென்யாட்டாவுக்கு, 98 சதவீதமான வாக்குகள் கிடைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X