2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொலம்பியாவில் பயணிகள் படகு மூழ்கியதையது: 6 பேர் பலி; 31 பேரை காணவில்லை

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு கொலம்பியாவிலுள்ள நீர்த்தேக்கமொன்றில், சுற்றுலாப் பயணிகள் படகொன்று மூழ்கியதைத் தொடர்ந்து, குறைந்தது ஆறு பேர் இறந்ததாகவும் 31 பேர் காணாமல் போயுள்ளதாகவும், கொலம்பிய ஜனாதிபதி ஜுவன் மனுவல் சன்டோஸ், நேற்று  (25) அறிவித்துள்ளார்.   

கொலம்பிய, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஓய்வெடுக்கும் பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் நகரான வத்தாப்பேயிலுள்ள எல் பென்யோல் நீர்த்தேக்கத்தில், நான்கு தளங்களைக் கொண்ட இந்தப் படகு, ஏன் மூழ்கியது என அதிகாரிகள் தெரிவித்திருக்கவில்லை.   

குறைந்தது ஒன்பது பேர் இறந்ததாக, பிராந்திய அரசாங்கம், முன்னர் தெரிவித்திருந்த நிலையில், ஆறு பேர் இதுவரையில் இறந்துள்ளதாகவும் 31 பேரை, இதுவரையில் காணவில்லை என்று தெரிவிக்கப்படுவதாக, ஜனாதிபதி சான்டோஸ் அறிவித்துள்ளார்,   

இந்நிலையில், தேசிய இடர் முகாமைத்துவ அதிகாரியொருவரான கார்லோஸ் இவான் மார்க்கஸ், ஆறு பேர் இறந்ததை உறுதிப்படுத்தியதோடு, இறந்தவர்கள் அனைவரும் கொலம்பியர்கள் என்றும், வயது குறைந்தவர்கள் அல்லர் என்றும் கூறியுள்ளார்.   

இதேவேளை, குறித்த படகானது, 170 பேரை காவிச் சென்றதாக, பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகிலிருந்த பெரும்பாலோனோர், ஏனைய படகுகளாலோ அல்லது தாமே தங்களையோ மீட்டுக் கொண்டதாக, தெரிவிக்கப்படுகிறது.   

படகானது விரைவாக மூழ்கியதாகவும், அனைத்தும் சில நிமிடங்களில் இடம்பெற்றதாக, மீட்புப் பணியில் பங்கேற்ற தீயணைப்புச் சேவையின் கப்டனொருவரான, லூயிஸ் பெர்னார்டோ மொராலெஸ் தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில், படகின் கீழ்த் தளங்கள் இரண்டு, மிகுந்த சனநெருக்கடியாக இருந்ததாகவும், உயிர்காப்பு அங்கிகளை பயணிகள் அணிந்திருக்கவில்லை எனவும், தப்பித்த ஒரு பெண்மணியான லோரா பக்குவாரோ தெரிவித்துள்ளார். இது தவிர, படகு மூழ்கப் போகின்றது என தாங்கள் உணரத் தொடங்கியதாக தெரிவித்த குறித்த பெண்மணி, படகில், பெருமளவில் சிறுவர்கள் இருந்ததாகக் கூறியுள்ளார்.   

இதேவேளை, படகிலிருந்தவர்களை விட, அதிக எண்ணிக்கையானோரைப் படகில் கொண்டு செல்ல முடியும் எனத் தனக்கு கூறப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி சான்டோஸ், இதனால், அளவுக்கதிகமானோரைக் கொண்டமையால் படகு மூழ்கியிருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.   

இந்நிலையில், படகு மூழ்கியதில் சிக்கிய 24 பேர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, அன்டியோக்கியா பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .