2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொலை முயற்சி என்கிறார் மதுரோ

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ பங்குகொண்ட இராணுவப் பேரணியொன்றில், ட்ரோன் மூலமான தாக்குதல் முயற்சி, நேற்று முன்தினம் (04) மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது எனவும், அதிலிருந்து தப்பிவிட்டதாகவும், ஜனாதிபதி மதுரோ தெரிவித்துள்ளார். வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலமாகவே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என, ஜனாதிபதி மதுரோ குறிப்பிட்டார்.

வெடிப்புச் சத்தம் கேட்டதும், படைவீரர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடியதை, காணொளிகள் மூலமாகக் காணமுடிந்தது. பின்னர், அரசாங்கத் தரப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, படைவீரர்களில் எழுவர் காயமடைந்திருந்தனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மதுரோ”, “என்னைக் கொல்வதற்கான தாக்குதல் அது. அவர்கள், என்னைக் கொல்ல முயன்றனர். பறக்கும் சாதனமொன்று, என் முன்னால் வெடித்தது” என்று தெரிவித்தார்.

இத்தாக்குதல் முயற்சியின் பின்னணியில், கொலம்பியாவே உள்ளது என, ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “[கொலம்பிய ஜனாதிபதி] ஜுவான் மானுவல் சான்டோஸ் என்ற பெயரே, இத்தாக்குதலுக்குப் பின்னாலுள்ளது என்பதில், எனக்குச் சந்தேகமில்லை” என்று குறிப்பிட்ட அவர், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சிலரே, இத்தாக்குதலுக்கு நிதியளித்தனர் என்று குறிப்பிட்டார். ஆனால், தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்த அவர் தவறினார்.

ஆனால், தம்மீதான குற்றச்சாட்டை, கொலம்பிய அரசாங்கம் மறுத்தது.

இதேவேளை, தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அரசாங்கம், “மிகக் கடும்போக்கு வலதுசாரிகளே தாக்குதல் நடத்தினர்” என்று குறிப்பிட்டது. நாட்டின் எதிர்க்கட்சியைக் குறிப்பிடுவதற்காகவே, அச்சொற்கள் பயன்படுத்தப்படுவது வழக்கமாகும்.

எனவே, ஒரே தாக்குதல் தொடர்பாக, ஜனாதிபதியும் அரசாங்கமும், வெவ்வேறு தரப்பினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .