2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொவிட்-19 ஊரடங்கை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 பரவலைக் குறைப்பதற்கான இரவு நேர ஊரடங்கு நீக்கப்பட வேண்டுமென நெதர்லாந்து அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ள ஹேக்கிலுள்ள நீதிமன்றமொன்று, இது சுயாதீன நடமாட்ட உரிமையை மீறுவதாகத் தீர்ப்பளித்துள்ளது.

உண்மையாக அவசரநிலை இல்லாத நிலையில், அவசரகாலச் சட்டமொன்றால் இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை 4.30 மணி வரையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை மறுதினம் மேன்முறையீடு வரையில் ஊரடங்கு நடைமுறையிலிருக்கலாம் என உயர் நீதிமன்றமொன்று பின்னர் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மாதம் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சில நெதர்லாந்து நகரங்களில் வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .