2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சங்கிலியில் கட்டி துன்புறுத்தப்பட்ட 40 மனநோயாளிகள் மீட்கப்பட்டனர்

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரட்லாம் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில், சங்கிலிகளில் கட்டிப்போட்டு, தாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த 40 மனநோயாளர்களை, பொலிஸார் மீட்டுள்ளனர்.  

மேலும், குறித்த மனநோயாளர்களுக்கான வைத்தியசாலையை நடத்திவந்து, நோயாளர்களைச் சங்கிலியால் கட்டிபோட்டு, அவர்களுடைய உறவினர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டவர்களைக் கைது செய்யப்பட்டதோடு, நோயாளர்களைச் சங்கிலியில் கட்டிப்போட்டவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர் . 

குறித்த பகுதியில் சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் தப்பிச் சென்று, உறவினர்களது உதவியை நாடியபோதே, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தெரியவந்ததாகவும், எவ்வாறாயினும் மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும், நோயாளி ஒருவரை, சங்கிலியில் கட்டிப்போட்டு சித்திவரை செய்வது, சட்டத்துக்குப் புறம்பானது என்று, ரட்லாம் மாவட்டத்துக்கான பொலிஸ் கண்காணிப்பாளர் தீபக் ஷூக்லா தெரிவித்துள்ளார்.  

ஒரு நோயாளருக்கு மாதமொன்றுக்கு, 6,000 ரூபாய் தொடக்கம் 8,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தப்படல் வேண்டும் என்றும் குறித்த வைத்தியசாலையின் உரிமையாளர் பணிப்புரை விடுத்திருந்துள்ளார். தற்போது, அங்கிருந்து மீட்கப்பட்ட அனைவருக்கும் மனநோய்ச் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அது உறுதி செய்யப்படுமிடத்து, அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும், பொலிஸார் கூறியுள்ளனர்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .