2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சட்டமா அதிபரிடம் மல்லர் விசாரணை

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதா என்பது தொடர்பாகவும், ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வரும் விசேட வழக்குத் தொடுநர் றொபேர் மல்லரின் குழுவால், ஐ.அமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செஸன்ஸ், நேர்காணப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சரவையைச் சேர்ந்த ஒருவர், மல்லரின் குழுவால் நேர்காணப்பட்டமை, இதுவே முதற்தடவையாகும்.

ட்ரம்ப் பிரசாரக் குழுவிலும், செஸன்ஸ் அங்கம் வகித்திருந்த நிலையில், அவர் மீதான விசாரணை/ நேர்காணல், முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ட்ரம்ப்பால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட எப்.பி.ஐ பணிப்பாளர் ஜேம்ஸ் கோமியும், மல்லரின் குழுவால் நேர்காணப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X