2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டமா அதிபர் செஷன்ஷிடம் கடும் கேள்விகள்

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேட்பாளராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவைச் சேர்ந்தவருக்கும், ரஷ்ய அரசாங்கத்தின் இடைத்தரகர்களுக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டது என்பதை, இப்போது ஞாபகப்படுத்துகிறார் என, ஐ.அமெரிக்க சட்டமா அதிபரும், வேட்பாளர் ட்ரம்ப்பின் தேர்தல்கால ஆலோசகருமான ஜெப் செஷன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், ரஷ்யத் தொடர்பு தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கருத்தோடு, முரண்படுவதாக இக்கருத்து அமைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதா என, ஐ.அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீதிச் செயற்குழுவும், விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்விசாரணைகளிலேயே, சட்டமா அதிபர் செஷன்ஸ் சாட்சியமளித்தார்.

அவரது இந்தச் சாட்சியமளிப்பில், இரு தரப்பினருக்குமிடையிலான உறவுகள் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டிருக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே வெளியாகியிருந்த தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வேட்பாளராக இருந்த ட்ரம்ப்பின் ஆலோசகர் ஒருவரான ஜோர்ஜ் பப்பலோபொலஸ், ரஷ்யாவுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், ட்ரம்ப்புக்கான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய முடியுமெனவும் கூறினாரெனச் செய்தி வெளியாகியிருந்தது. அச்சந்திப்புக் குறித்து, இப்போது ஞாபகம் வருகிறது என, அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில், தனக்கு ஞாபகமில்லையென அவர் இங்கு குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் காங்கிரஸில் சாட்சியமளித்திருந்த செஷன்ஸ், ரஷ்யர்களுடன் பிரசாரக் குழுவுக்குச் சம்பந்தம் இருந்ததென்பது குறித்துத் தனக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, பப்படோபொலஸ், தற்போது கைதுசெய்யப்பட்டு, இவ்விடயம் வெளியான பின்னர், அவர் கதையை மாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், நீதிச் செயற்குழுவில் காணப்பட்ட, ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள், செஷன்ஸ் பொய் சொல்கிறாரெனக் குற்றஞ்சாட்டினர். இதன்போது, அவர்களுக்கும் செஷன்ஸுக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .