2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சட்டமா அதிபர் மீது ட்ரம்புக்குக் கோபம்

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யா தலையிட்டதா என்பது தொடர்பான விசாரணைகளிலிருந்து, சட்டமா அதிபர் ஜெப் செஸன்ஸ் தன்னை விலக்கிக் கொள்ளுவார் என்று தெரிந்திருந்தால், அப்பதவிக்கு அவரை நியமித்திருக்க மாட்டார் என, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செஸன்ஸின் பதவியை உறுப்படுத்துவதற்கான செனட் சபையின் விசாரணைகளின் போது, ட்ரம்ப் குழுவினர், ரஷ்யாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினரா என்று கேட்கப்பட்டபோது, தானும் அந்தக் குழுவில் இருந்ததாகவும், எந்தவிதத் தொடர்புகளையும் தான் ஏற்படுத்தவில்லையெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், ரஷ்யத் தூதுவருடன் அவர் தொடர்புகளை ஏற்படுத்தினார் என்பது வெளிப்படுத்தப்பட்ட பின்னரே, ரஷ்ய விசாரணைகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது பதிலளிப்பை, ஜனாதிபதி விமர்சித்தார். “ஜெப் செஸன்ஸ், சில மோசமான பதில்களை வழங்கினார். இலகுவான கேள்விகளுக்கு, இலகுவான பதில்களாக இருந்திருக்க வேண்டிய நிலையில், அவரது பதில்கள் அவ்வாறு அமையவில்லை” என்று தெரிவித்தார்.

வேட்பாளராக ட்ரம்ப் இருந்தபோது, அவருக்கு ஆரம்பத்திலேயே ஆதரவு வழங்கிய முக்கியமானவர்களில், ஜெப் செஸன்ஸும் ஒருவர். அவர் மீதே, ஜனாதிபதியின் கோபம், தற்போது பாய்ந்துள்ளது.

அதேபோன்று, ரஷ்யா மீதான விசாரணைகளைத் தற்போது மேற்கொண்டுவரும், விசேட விசாரணையாளர் றொபேர்ட் எஸ். மல்லர் மீதும், ஜனாதிபதி தனது விமர்சனங்களை முன்வைத்தார். அத்தோடு, ரஷ்யா தொடர்பான விடயங்களைத் தாண்டி, வேறு விடயங்களுக்கு அவர் செல்லக்கூடாது என்றும், ஜனாதிபதி எச்சரித்தார்.

ரஷ்யாவுடனான உறவுகள் என்பதைத் தாண்டி, அவரது குடும்பத்தின் நிதி தொடர்பான விசாரணைகளை அவர் விசாரிப்பது, எல்லையொன்றைத் தாண்டுவதாக அமையுமா என்று கேட்டபோது, ஆமாம் என்று அவர் பதிலளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X