2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சீனாவின் பட்டு மற்றும் பாதை ஒப்பந்தங்ளை இரத்துச் செய்தோம்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெளிநாட்டு உறவுகளில் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே, விக்டோரியா மாநிலத்தித்துக்கும் சீனாவுக்குமிடையிலான பட்டு மற்றும் பாதை முன்னெடுப்பின் இரண்டு ஒப்பந்தங்களை இரத்துச் செய்யும் முடிவு ஒன்று எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா, எந்தவொரு நாட்டையும் இலக்கு வைக்கவில்லையல்ல எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், விக்டோரியா மாநிலத்தால் கைச்சாத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களை வீற்றோ செய்யும் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் மரிஸே பெய்னின் நகர்வை விமர்சித்த அவுஸ்திரேலியாவிலுள்ள சீனத் தூதரகம், இது அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை மேலும் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா சம்மேளனமொன்று என இன்று தெரிவித்த பெய்ன், வெளிநாட்டு அரசாங்கங்களுடன் மாநிலங்கள் ஒப்பந்தங்களுக்குச் செல்வதற்கு தற்போது மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளர் சீனா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 எங்கிருந்து தோன்றியது தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை அவுஸ்திரேலியா கோரியது முதல் சீனாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்ததுடன், இதையடுத்து வர்த்தக ரீதியிலான பதிலடியை சீனா வழங்கியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X