2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீனாவில் புதிதாக COVID-19 உயிரிழப்புகள் இல்லை

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் COVID-19 பரவல் ஆரம்பித்த பின்னர் முதற்தடவையாக நேற்று உயிரிழப்புகள் எதுவும் COVID-19-ஆல் பதிவுசெய்யப்படவில்லை என்பதோடு, புதிய COVID-19 தொற்றல்களும் வீழ்ச்சியடைந்துள்ளன. 

சீனாவில் நேற்று 32 COVID-19 புதிய தொற்றல்கள் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தவிர குறித்த ஆணைக்குழு தேசியளவிலான தரவுகளை இவ்வாண்டு ஜனவரி மாதம் வெளியிட ஆரம்பித்த பின்னர் சீனாவின் மத்திய மாகாணமான ஹுபெய்யின் COVID-19 மய்யமான வுஹானில் COVID-19-ஆல் உயிரிழப்புகள் எவையும் நேற்று ஏற்படவில்லை. வுஹான் தவிர்ந்த ஏனைய சீனாவில் கடந்த மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் COVID-19 உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் இதுவரையில் மொத்தமாக நேற்று 81,740 பேருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 3,331 பேர் COVID-19-ஆல் இறந்துள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .