2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சபாநாயகரின் அறிவிப்பால் மேலும் சிக்கலில் மேயின் பிரெக்சிற் ஒப்பந்தம்

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) ஒப்பந்தமானது மேலும் சிக்கலை நேற்று முன்தினம் சந்தித்துள்ளது.

அடிப்படையில் வித்தியாசமான வடிவத்தில் பிரதமர் மேயின் பிரெக்சிற் ஒப்பந்தம் சமர்பிக்கப்படாமல் விட்டால், அவர் தனது பிரெக்சிற் ஒப்பந்தத்தை புதிய வாக்கெடுப்புக்கு விட முடியாது என பிரித்தானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜோன் பெர்கோ தெரிவித்தமையைத் தொடர்ந்தே, பிரதமர் மேயின் ஒப்பந்தமானது மேலும் சிக்கலைச் சந்தித்துள்ளது.

1604ஆம் ஆண்டு நாடாளுமன்ற விதிகளின்படி, குறிப்பிடத்தக்க ஒரேமாதிரியான முன்மொழிவுகள், நாடாளுமன்ற அமர்வொன்றில் ஒரு தடவைக்கு மேல் மீண்டும் வாக்கெடுப்புக்கு விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தீர்மானமானது தனது இறுதி வார்த்தையாகக் கருத்திற்கொள்ளப்படக்கூடாது எனத் தெரிவித்த ஜோ பெர்கோ, பிரதமர் மேயின் அரசாங்கமானது, ஏற்கெனவே வாக்களித்தது அல்லாதது போன்ற புதிய முன்மொழிவொன்றை கொண்டு வரலாம் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் முழுமையான வெளியேற்றமொன்றை எதிர்பார்த்துள்ள பிரெக்சிற்க்கு ஆதரவானவர்கள், ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதே இனிச் சாத்தியம் எனத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தாம் வெளியேறும் இம்மாதம் 29ஆம் திகதியைத் தாண்டி பிரெக்சிற்றை கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாக பிரதமர் மேயின் அரசாங்கம் வெளிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், தாங்கள் பாரியதொரு அரசமைப்பு நெருக்கடியில் இருப்பதாகத் தெரிவித்த அரச வழக்குரைஞர் றொபேர்ட் புக்லான்ட், நாடாளுமன்ற அமர்வை ஒத்தி வைத்து, புதிய அமர்வொன்றை ஆரம்பிப்பதன் மூலம் பிரதமர் மேயின் பிரெக்சிற் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவது ஒரு வழியாகக் காணப்படுவதாகக் கூறியுள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .