2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமாதானத் தூது அனுப்பியது வடகொரியா

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தப்பட்ட நாடான வடகொரியா, “தமது சொந்த நாடுகளிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்துக் கொரியர்களுக்கும்”, ஒற்றுமைப்படுத்தலுக்கான வேண்டுகோளை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நேற்று விடுத்த வடகொரியா, சமாதானம் தொடர்பாக அண்மைக்காலத்தில் வெளியிட்டுவரும் தமது சமிக்ஞைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஏனைய நாடுகளின் உதவிகளின்றி, வடகொரியாவும் தென்கொரியாவும் ஒற்றுமைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான திருப்புமுனையைக் காண வேண்டுமெனவும், அவ்வறிக்கை கோரியுள்ளது. ஏனைய நாடுகளை விடுத்து, இரண்டு கொரியாக்களும் மாத்திரம் பேச வேண்டுமென்பது, புத்தாண்டு உரையிலும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் விடுத்திருந்த கோரிக்கையாகும். அதன் விளைவாகவே, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில், அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள சமாதான முன்னெடுப்புகள் ஆரம்பித்திருந்தன.

இந்நிலையில், இரு நாடுகளினதும் அரசியல் கட்சிகளினதும் இணைந்த கூட்டமொன்றைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், கொரியத் தீபகற்பத்தில் காணப்படும் இராணுவ நடவடிக்கை தொடர்பான அச்சத்தை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கொரியத் தீபகற்பத்தில் காணப்படும் இராணுவரீதியான பதற்றமே, இரு நாடுகளுக்குமிடையிலான உறவும் ஒற்றுமைப்படுத்தலும் ஏற்படுவதற்குப் பிரதான தடைகளாக உ;ளளன எனவும், வெளிச் சக்திகளுடன் மேற்கொள்ளப்படும் இணைந்த இராணுவப் பயிற்சிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தத் தடையாக உள்ளன எனவும், அவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .