2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்ச்சையில் சிதம்பரம்; பக்கோடா விற்பதும் யாசகம் கேட்பதும் ஒன்றா?

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பக்கோடோ விற்பவர்களையும் யாசகம் கேட்பவர்களையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிட்டு, பக்கோடோ விற்பவர்களை அவமானப்படுத்தி விட்டார் என, காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரான ப. சிதம்பரம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்குப் பதில் சொல்வதாக நினைத்து, முன்னாள் நிதியமைச்சரான சிதம்பரம் தெரிவித்த கருத்துகள், காங்கிரஸுக்குப் பாதிப்பாக அமைந்துவிட்டன.

அண்மையில் உரையாற்றியிருந்த பிரதமர் மோடி, நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன எனத் தெரிவித்ததோடு, வீதியில் பக்கோடா விற்பவர்களும் பணியாளர்கள் தான் எனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி வழங்குவது போல, தனது டுவிட்டர் கணக்கில் தொடர் டுவீட்களை வெளியிட்ட சிதம்பரம், “பக்கோடா விற்பதும் தொழில் தான் என, பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி பார்த்தால், பிச்சையெடுத்தலும் தொழில் தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சுயதொழில் புரிபவர்களை அவமானப்படுத்தி விட்டதாக, காங்கிரஸ் மீதும் சிதம்பரம் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து, தனது கருத்திலிருந்து பின்வாங்கியுள்ள சிதம்பரம், தனது கருத்துகளை, பா.ஜ.க திரிக்கிறது என்று தெரிவித்ததோடு, “பக்கோடா விற்பது, ஏழைகளுக்கான கௌரவமான சுயதொழில். ஆனால் அது, வேலையாகக் கருதப்படக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .