2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சர்வதேச நீதிமன்றத்தில் இனவழிப்பு குற்றச்சாட்டை மறுக்கிறார் சூ கி

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றத்தில், தனது நாட்டுக்கெதிரான இனவழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கெதிராக தனது நாட்டை மியான்மார் அரசாங்கத்தின் தலைவர் ஆங் சான் சூ கி நேற்று  நியாயப்படுத்தியுள்ளார்.

முஸ்லிம் றோகிஞ்சாக்களுக்கெதிராக அட்டூழியங்களை மியான்மார் புரிந்துள்ளது என்ற பரவலான குற்றச்சாட்டுகளுக்கெதிராக சமாதானத்துக்கான நொபெல் பரிசை வென்ற தலைவர் ஆங் சான் சூ கி பதிலளித்துள்ளார்.

தனது ஆரம்ப உரையில், மியான்மாருக்கெதிரான வழக்கானது முழுமையற்றதெனவும், தவறானதும் என தலைவர் ஆங் சான் சூ கி தெரிவித்துள்ளார்.

பெளத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில், இராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான றோகிஞ்சாக்கள் 2017ஆம் ஆண்டு கொல்லப்பட்டதுடன், 700,000க்கும் மேற்பட்டோர் அயல்நாடான பங்களாதேஷுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், ராக்கைன் மாநிலத்தில் தீவிரவாத ஆபத்தைத் தடுப்பதாக எப்போதும் மியான்மார் தெரிவிக்கின்ற நிலையில், அதை தலைவர் ஆங் சான் சூ சியும் தொடர்ந்திருந்தார். அரசாங்க பாதுகாப்பு நிலைகள் மீதான றோகிஞ்சா ஆயுததாரிகளின் தாக்குதலால் வெடித்த உள்நாட்டு ஆயுத மோதலே வன்முறை என தலைவர் ஆங் சான் சூ கி வர்ணித்திருந்தார்.

இதேவேளளையில், சில சமயங்களில் பொருத்தமற்ற படைப்பலத்தை இராணுவம் பயன்படுத்தியிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்ட தலைவர் ஆங் சான் சூ கி, படைவீரர்கள் போர்க்குற்றங்களை புரிந்திருந்தால் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X