2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சவூதி மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில் வெளிநாட்டுத் தலையீட்டின் காரணமாக ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்றில், சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியால் மேற்கொள்ளப்பட்ட பல மீறல்கள் பட்டியற்படு த்தப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டில், 157 பேரைக் கொன்ற 10 தாக்குதல்களை, ஐ.நா ஆராய்ந்துள்ளது. குடியேற்றவாசிகளின் படகு, இரவுச் சந்தையொன்று, வதிவிடக் கட்டடங்கள் 5, விடுதியொன்று, வாகனமொன்று, அரசாங்கப் படைகள் ஆகியன, இத்தாக்குதல்களின் இலக்குகளாக அமைந்தன என வெளிப்படுத்த ப்பட்டுள்ளது.

தாக்குதல்களை மேற்கொள்வதற்கு, துல்லியமாக வழிநடத்தப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், மேற்குறிப்பிட்ட இடங்களே, தாக்குதலுக்கான இலக்காக அமைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்களின் இலக்குகளை, வேண்டுமென்றே தாக்கியது என்றே கருத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது என, ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.

குறித்த தாக்குதல்களை நடத்தியமைக்கான காரணங்களை வெளிப்படுத்துமாறு, சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியிடம் கோரப்பட்டிருந்த போதிலும், இவ்வறிக்கையைத் தயாரித்த ஐ.நா குழுவுக்குப் பதில்களை அனுப்ப, சவூதி இராணுவக் கூட்டணி தவறியது என்று கூறப்படுகிறது.

தாக்குதல்களைத் தவிர, எதேச்சதிகாரக் கைதுகள், சுதந்திரத்தைப் பறித்தல், காணாமல் போகச் செய்யப்படுதல் ஆகியன, பரவலாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் காணப்படுகின்றன என, அவ்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரக முகாம்களில் இவை காணப்படுகின்றன என, அவ்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

யேமன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஐக்கிய அரபு அமீரகம், பல்வேறு வகையான சித்திரவதைகளை மேற்கொண்டு வருகிறது என வெளிப்படுத்தப்படுகிறது.

அதேபோல், இவ்விராணுவக் கூட்டணியால் நிதியளிக்கப்படும், ஆயுதமளிக்கப்படும் ஆயுதக்குழுக்கள், “யேமனின் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன” என, அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .