2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சவூதிக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையில் தொடர்பு

Editorial   / 2017 நவம்பர் 21 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேல் சக்திவள அமைச்சர் யுவல் ஸ்டெய்னிட்ஸ், சவூதி அரேபியாவுடன் இரகசியத் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். இரு நாடுகளுக்குமிடையில் தொடர்பு காணப்படுகிறது என, நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், உயர்நிலை அதிகாரியொருவர், இவ்வாறு ஏற்றுக் கொண்டிருக்கின்றமை முக்கியமாகக் கருதப்படுகிறது.

இரு நாடுகளும், ஈரானைப் பொது எதிரியாகக் கருதும் நிலையில், ஈரான் தொடர்பிலேயே தனது தொடர்பு காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவும் இஸ்‌ரேலும், மத்திய கிழக்குக்கான தமது பிரதான அச்சுறுத்தலாக, ஈரானைக் கருதுகின்றன. சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்துள்ள முரண்பாடு காரணமாக, சவூதி அரேபியாவும் இஸ்‌ரேலும் இணைந்து செயற்படத் தீர்மானித்தன எனக் கருதப்படுகிறது.

சவூதி அரேபியா சார்பாக வெளியிடப்பட்ட கொள்கையாக, 1967ஆம் ஆண்டில் இடம்பெற்ற மத்திய கிழக்குப் போரில், இஸ்‌ரேலால் கைப்பற்றப்பட்ட அரபு நாடுகளின் நிலங்களிலிருந்து இஸ்‌ரேல் பின்வாங்கும் வரை, இஸ்‌ரேலுடன் தொடர்புகளை ஏற்படுத்தப் போவதில்லை என்பது காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இத்தொடர்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .