2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சவூதியின் நிபந்தனைகளை விமர்சிக்கிறார் ஏர்டோவான்

Editorial   / 2017 ஜூன் 26 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாருடனான உறவுகளைத் துண்டித்துள்ள சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள், கட்டாருக்கு வழங்கியுள்ள நிபந்தனைகளை, சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்று விமர்சித்துள்ள துருக்கி ஜனாதிபதி தய்யீப் ஏர்டோவான், குறித்த நிபந்தனைகளுக்கு எதிராக கட்டார் எடுத்துள்ள நிலைப்பாட்டையும் வரவேற்றுள்ளார்.

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை மீளக் கொண்டுவர வேண்டுமாயின், தாம் விதிக்கும் 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, சவூதி அரேபியா தெரிவித்திருந்தது.

அந்த நிபந்தனைகளில், அரச ஊடகமான அல் ஜஸீராவை மூடுதல், ஈரானுடனான உறவுகளைக் குறைத்தல், கட்டாரிலுள்ள இராணுவத் தளத்தை மூடுதல் உள்ளிட்டவை காணப்பட்டதுடன், 10 நாட்களுக்குள் அந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டுமென, கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிபந்தனைகளை மறுத்த கட்டார், தங்களுடைய இறைமையை மீறுவதாக அவை அமைந்துள்ளன என்று தெரிவித்தது.

இந்நிலையில், கட்டாரின் நிலைப்பாட்டை வரவேற்ற ஜனாதிபதி ஏர்டோவான், துருக்கி இராணுவத் தளத்தை மூட வேண்டுமென்ற கோரிக்கை, மரியாதைக் குறைவானது என்று தெரிவித்தார்.

தாங்கள், சவூதி அரேபியாவிலும் இராணுவத் தளமொன்றை அமைப்பதற்குக் கோரியிருந்ததாகத் தெரிவித்த அவர், அதற்கான பதில் இன்னமும் கிடைக்கவில்லை எனவும், இந்நிலையில், தமது இராணுவத் தளத்தை அகற்றுமாறு கோருவது, சரியானது அன்று எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .