2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘சிட்னியில் தோற்றால் அரசாங்கத்துக்கு ஆபத்து’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வார இறுதியில், சிட்னியில் நடைபெறும் இடைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கத்துக்கு ஆபத்தானதாக அமையுமென, அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கொம் டேர்ண்புல் எச்சரித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக, பிரதிப் பிரதமரை இழந்த பிரதமர் டேர்ண்புல், பின்னர் ஜோன் அலெக்ஸான்டர் என்ற நாடாளுமன்ற உறுப்பினரையும் இழந்தார். பிரதிப் பிரதமர், தன்னுடைய இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

ஆனால், ஜோன் அலெக்ஸான்டரால் மீண்டும் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. பிரதான இரண்டு கட்சிகளும் வெற்றிபெறுவதற்கு, தலா 50 சதவீதமான வாய்ப்பு இருக்கிறது என, இறுதியாக வெளிவந்த கருத்துக்கணிப்புக் கூறுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் வெறும் ஒரே ஓர் உறுப்பினரால் பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஆளுங்கட்சிக்கு, இத்தேர்தல் முக்கியமானதாக மாறியுள்ளத.

“இது மிகவும் இறுக்கமான தேர்தல். உயர்ந்த செலவீமானது. பனெலொங்கில் தொழிலாளர் கட்சி வெற்றிபெறுமாயின், அக்கட்சியின் தலைவர் பில் ஷோர்ட்டின், பிரதமராக வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன” என, பிரதமர் டேர்ண்புல் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .