2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சிரிய நடவடிக்கையை விரைவில் முடிப்போம்’

Editorial   / 2018 ஜனவரி 23 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவுக்குள் துருக்கி முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைக்கான எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், இந்நடவடிக்கையை விரைவில் நிறைவுசெய்வது தான் தமது எதிர்பார்ப்பு என, துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீர் ஏர்டோவான் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கைகள், கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்த அவர், “இந்த நடவடிக்கை, மிகக்குறுகிய காலத்தில் நிறைவாகும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்ததோடு, “ஓர் அடியும் பின்னால் எடுத்து வைக்க மாட்டோம்” என்றும் குறிப்பிட்டார்.

 

துருக்கியில் காணப்படும் குர்திஷ் குழுக்களை, பயங்கரவாத அமைப்புகளாக துருக்கி கருதும் நிலையில், அதன் நீட்சியாகவே, சிரியாவிலுள்ள குர்திஷ்கள் மீதான நடவடிக்கையும் கருதப்படுகிறது.

இந்தப் பின்னணியில் தான், சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக, துருக்கியில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும், தனது எச்சரிக்கையை, ஏர்டோவான் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படை நடவடிக்கைக்கு, துருக்கியிலுள்ள எவராவது எதிர்ப்புத் தெரிவித்தால், அதற்கான கடுமையான விளைவை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

குர்திஷ்கள் பெரும்பான்மையாக வாழும் தென்கிழக்கு நகரான தியார்பகீர் மற்றும் தலைநகர் இஸ்தான்புல் ஆகிய நகரங்களில், ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோரை, பொலிஸார் கலைத்தனர். அத்தோடு, 30க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர் என்றும், மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .