2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிரியாவில் 39 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு சிரியாவில், எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள, துருக்கி எல்லைக்கருகிலுள்ள இட்லிப் மாகாணத்தின் சர்மடா நகரத்திலுள்ள ஆயுதக் கிடங்கொன்றில் நேற்று  ஏற்பட்ட கட்டடங்கள் தகர்ந்த வெடிப்பொன்றில் 12 சிறுவர்கள் உட்பட குறைந்தது 39 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எதனால் ஏற்பட்டதெனத் தெரியாத குறித்த வெடிப்பால் இரண்டு கட்டடங்கள் தகர்ந்ததாகக் கூறப்படுகிறது. புல்டோஸர்களைப் பயன்படுத்தி சிதைவுகளை அகற்றி, வீழ்ந்திருந்த கட்டடங்களுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிருடனிருந்த ஐந்து பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக சிவில் பாதுகாப்பு தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் சிதைவுகளிலிருந்து மேலும் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இறந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்ததோடு, 39 பொதுமக்களுக்கு மேலதிகமாக ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாமின் உறுப்பினர்கள் மூவரும் கொல்லப்பட்டதாகக் கூறினார். அல்-கொய்தாவின் முன்னாள் சிரியப் பிரிவின் ஆயுததாரிகளால் தலைமைதாங்கப்படும் கூட்டணியே ஹயாட் தஹ்ரர் அல்-ஷாம் ஆகும்.

சர்மடாவிலுள்ள வசிப்பிடக் கட்டடமொன்றிலிருந்த ஆயுதக் கிடங்கிலேயே வெடிப்பொன்று ஏற்பட்டதாகவும் ஆனால் வெடிப்புக்கான காரணம் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறிய றமி அப்டெல் ரஹ்மான், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய மாகாணமாக ஹொம்ஸிலிருந்து இடம்பெயர்ந்த ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவின் ஆயுததாரிகள் குடும்ப உறுப்பினர்கள் எனத் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X