2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிரியாவில் ஈரானிய இலக்குகள் மீது இஸ்‌ரேல் தாக்குதல்

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலுள்ள ஈரானிய இலக்குகள் மீது, நேற்று (21) காலை வேளையில் தாக்குதல்களை மேற்கொண்டதாக, இஸ்‌ரேலிய இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. சிரியாவிலிருந்து தமது நாட்டை நோக்கி ஏவப்பட்ட எறிகணையை இடைமறித்த சில மணிநேரங்களிலேயே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஈரானின் புரட்சிகரக் காவல் பிரிவைச் சேர்ந்தோர் சிரியாவில் காணப்பட்ட பகுதிகள் மீதும், சிரியாவின் வான் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மீதும் தமது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என, இஸ்‌ரேல் தெரிவித்தது. இத்தாக்குதல்களில், 11 பேர் கொல்லப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டோரில், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான 11 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், அவர்களில் 2 பேர் சிரியர்கள் எனவும் தெரிவித்தது.

இத்தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கையிட்ட சிரிய அரச ஊடகம், இஸ்‌ரேலால் ஏவப்பட்ட அநேகமான எறிகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனத் தெரிவித்தது.

சிரியாவில் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை இஸ்‌ரேல் வெளிப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுப் பொதுவாகவே உள்ளது. ஆனால் இம்முறை, “தாக்குதல்களை மேற்கொண்டு கொண்டிருக்கிறோம்” என, இஸ்‌ரேல் தெரிவித்திருந்தது.

தம்மை நோக்கி, நிலத்திலிருந்து வானுக்கான டசின்கணக்கான சிரிய எறிகணைகள் ஏவப்பட்டன எனத் தெரிவித்த இஸ்‌ரேல் இராணுவம், அவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாமென, தெளிவான எச்சரிக்கைகளை ஏற்கெனவே வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டது. அதற்குப் பதிலடியாகவே, தாம் தாக்கியதாக இஸ்‌ரேல் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .