2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிரியாவில் மீண்டும் இரசாயனத் தாக்குதல்?

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், தனது நாட்டில் மீண்டுமோர் இரசாயனத் தாக்குதலைத் திட்டமிட்டு வருகிறார் என்ற சந்தேகம் காணப்படுவதாக, வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. அத்தோடு, அவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டால், பாரிய விளைவொன்றைச் சந்திக்க நேருமெனவும், அது எச்சரித்தது.

இவ்வாண்டு ஏப்ரலில், போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல்களுக்காக மேற்கொள்ளப்பட்ட தயார்படுத்தல்களைப் போன்ற தயார்படுத்தல்கள், தற்போது மேற்கொள்ளப்படுவதாக, வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஷோன் ஸ்பைஸர், “அசாட் அரசாங்கத்தால், இன்னுமோர் இரசாயனத் தாக்குதலை நடத்துவதற்கான தயார்படுத்தல்கள் காணப்படுவதை, ஐ.அமெரிக்கா அடையாளங்கண்டுள்ளது. இந்தத் தாக்குதல் நடைபெறுமாயின், அப்பாவிச் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள், தொகையாகக் கொல்லப்படுவர்” என்று தெரிவித்தார்.

ஆனால், என்னவாறான ஆதாரங்களைக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்ற தகவலை, அவர் வெளியிடவில்லை.

இதற்கு முன்னர், ஏப்ரலில் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட போது, சிரிய இராணுவ இலக்குகள் மீது, ஐ.அமெரிக்காவால் தாக்குதல் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .