2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிரியாவில் வன்முறை அதிகரிக்கையில் 30 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள இறுதியிடமான இட்லிப்பில் வான் தாக்குதல்களில் நேற்று  19 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அலெப்போ மாகாணத்தில் குர்திஷ்களின் கட்டுப்பாட்டிலுள்ள நகரமொன்றின் மீதான துருக்கி ஆட்லறித் தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

அல்-கொய்தாவின் முன்னாள் சிரியக் கிளையான ஹயாட் அல் தஹ்ரிர் ஷாமால் ஆதிக்கம் செலுத்தப்படும் குழுவின் பெரும்பாலான கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப்பில், மாரெட் அல்-நுமான் நகரத்திலுள்ள சந்தையொன்றின் மீதான சிரிய அரசாங்கத்தின் வான் தாக்குதல்களில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இட்லிப்பின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற ரஷ்ய, சிரிய அரசாங்க குண்டுத் தாக்குதல்களில் ஆறு பேர் இறந்ததாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது. இதில், இட்லிப் சிறைச்சலையொன்றின் மீதான ரஷ்ய தாக்குதலொன்றில், பெண்ணொருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்தமை உள்ளடங்குகின்றது.

இந்நிலையில், இட்லிப்பின் தென்கிழக்கு எல்லையில் சிரிய அரசாங்கப் படைகளும், ஆயுதக் குழுக்களும் கடும் மோதல்களில் ஈடுபட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .