2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிரியாவுக்கு சர்வதேச நாடுகளும் எச்சரிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதல் தொடர்பில், சர்வதேச ரீதியான கலந்துரையாடல் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கியமான சர்வதேச நாடுகளும் தமது கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளன.

டூமாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலை “கொலைவெறித்தனமான” தாக்குதல் என வர்ணித்த ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, அத்தாக்குதலை “முழுமையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டார். அத்தோடு, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் ஆதரவாளர்கள், இதற்குப் பொறுப்புக்கூறப்பட வைக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

இத்தாக்குதலைக் கண்டித்துள்ள பிரான்ஸ், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குப் பதிலடி வழங்கப்பட வேண்டுமென எச்சரித்தது. இஸ்‌ரேலும், இத்தாக்குதலைக் கண்டித்திருந்தது.

பாப்பரசர் பிரான்ஸிஸும், இத்தாக்குதலை ஏற்கெனவே கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .